ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு 4 பெண்களை கற்பழித்த 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினர் .
ஆகஸ்டு மாதம் இந்த சம்பவம் நடந்தது . போலிஸ் போன்று வேடமணிந்த 8 பேர் ஒரு குடும்பம் பயணித்து கொண்டு இருந்த வண்டியை நிறுத்தி அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் . அவர்கள் அந்த பெண்களை அடித்து அவர்களிடம் கொள்ளையும் அடித்தனர் . அந்த 4 பெண்களில் ஒருவர் கற்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த ஐந்து பேரையும் காபுலில் உள்ள புலி சர்க்கி சிறையில் வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் . இந்த தூக்கு தண்டனைக்கு முன்னாள் ஜனாதிபதி ஹமிது கர்சாய் தனது பதவியின் இறுதி நாளில் ஒப்புதல் அளித்தார் .
இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்காக மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .