BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 10 October 2014

மறைக்கப்பட்ட வரலாறு : நிலவை தகர்க்க முயற்சித்த அமெரிக்கா



வாஷிங்டன்: 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.

இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், “சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 238,000 மைல் கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு ராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா மேலும் சோவியத் யூனியனை விட தானே வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies