அமெரிக்காவின் கெண்டக்கி மாகானத்தின் மருத்துவமனை ஒன்றில் 15 வயது மாணவன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . அவனை வன்புணர்வு செய்த மூன்று இளைஞர்களும் , இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
விசாரணையில் அவர்கள் அந்த 15 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ததோடு மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து மற்ற மொபைல்களுக்கு பரப்பியுள்ளனர் .டைலர் , ஜோன்ஸ் , மில்லர் என்ற அந்த மூன்று பேர் மீதும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மூன்று பேருக்கும் மொத்தம் 1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . மற்ற இரண்டு சிறுவர்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர் .