கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர் முழுவதும் விளையாடாமல் பாதியுடன் நாடு திரும்பியது . தீடிரென கிளம்பியதால் இந்தியாவின் பிசிசிஐ க்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது . இந்த இழப்பை ஓரளவு சரி கட்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பினர் . அவர்களும் ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாட ஒத்துக் கொண்டனர் .
இதற்கு பதிலாக அவர்கள் இந்தியாவில் அடுத்த வருடம் நடக்க இருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர் . இந்தியா எந்த நாட்டிற்கு சென்று போட்டிகள் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு பெரும் லாபம் கிடைப்பது இயல்பு . இதனால் இலங்கை இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் .
ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என தெரியவில்லை . இப்போதைக்கு இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது .