குஜராத்தின் சுராத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிளாலர்களுக்கு தீபாவளி போனசாக 500 கார்கள் மற்றும் 200 பிளாட்டுகள் மற்றும் பல விலை உயர்ந்த ஆபரணங்களை பரிசாக கொடுத்துள்ளார் . முதலாளியின் பெயர் சாவ்ஜி பாய் .
தன்னிடம் வேலைப் பார்க்கும் 1200 பேருக்கு இவர் இந்த அதிர்ச்சி பரிசை அளித்துள்ளார் . தன்னிடம் வேலைப் பார்ப்பதில் கார் இல்லாத 491 பேருக்கு காரைப் பரிசாக கொடுத்துள்ளார் . வீடு இல்லாத 200 பேருக்கு பிளாட் அளித்துள்ளார் . கிட்டத்தட்ட 525 தொழிலாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை பரிசாக அளித்துள்ளார் .
இது குறித்து சாவ்ஜி பாய் கூறுகையில் , " நாங்கள் 1200 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலக்கு கொடுத்தோம் , அந்த இலக்கை முடித்தவர்களுக்கு நாங்கள் பரிசு அளிக்கிறோம் " என்றார் .