ஹேக்கர்கள் வெளியிட்ட நிர்வாண படங்களை கூகுள் தனது தளத்தில் வைத்து இருந்ததற்காக தொடரப்பட்ட வழக்கின் அச்சுறுத்தல் காரணமாக கூகுள் தனது தளத்தில் இருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை நீக்கியது .
மார்டின் சிங்கர் என்னும் வழக்கறிஞர் பல நடிகைகளின் சார்பாக கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் . அந்த கடிதத்தில் கூகுள் நிறுவனம் நடிகைகளின் நிர்வாண படங்களை நீக்க கூகுள் தகுந்த முயற்சிகள் எடுக்கவில்லை என்றும் அந்த படங்களின் மூலம் கூகுள் வருமானம் சம்பாதித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார் .
இது குறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " நாங்கள் அந்த கடிதத்தைப் பெற்ற சில நிமிடங்களில் தங்கள் தளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான போட்டோக்களை நீக்கி விட்டோம் . இணையம் பல நல்ல விடயங்களுக்கு பயன்படுகிறது . அதில் மற்றவர்களின் தனி நபர் போட்டோக்களை திருடுவது நல்ல விடயம் அல்ல " என்றார் .