BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

ஆம்னி பஸ் உரிமையாளர்களும், திரை உலகமும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஸ்ட்ரைக் செய்வது ஏன்? வெளிவராக தகவல்கள்

திரை உலகமும் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் ஏன் ஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு எதிராக போராடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஊழலுக்கு எதிராக பல நூறு படம் எடுத்த தமிழ் திரையுலகம் ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்தது, இதற்கு திரை உலகில் அளிக்கப்படும் பதிலானது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ் திரையுலகமே திமுக தலைமை குடும்பத்தின் கட்டுப்பாடின் கீழ் வந்தது அவர்களை கேட்காமல் எந்த நடிகரும் கால்ஷீட் தரமுடியாது, எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாது, எந்த இயக்குனரும் இயக்க முடியாது மீறினால் திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காது, அடிமாட்டு ரேட்டில் இவர்கள் சேனலுக்கு தான் படத்தை விற்க வேண்டும், மீறி எந்த சேனலுக்கும் படத்தை விற்கமுடியாது, இந்த கொடுமையெல்லாம் அதிமுகவின் ஆட்சியில் தான் முடிவிற்கு வந்தது என்பதால் தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தாலும் போராட்டங்கள் மேற்கொள்கிறோம் என்கிறார்கள்

திரை உலகம் குறித்த செய்திகள் புதிதல்ல, நாம் ஏற்கனவே அறிந்தது தான், ஆனால் ஆம்னி பஸ்காரர்கள் ஏன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்று விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின, கேபிள் டிவி புழக்கத்துக்கு வந்த காலங்களில் ஏரியாவுக்கு ஏரியா கொஞ்சம் முதலீட்டில் டிஷ்கள் வைத்து வீடுகளுக்கு கேபிள் டிவி கனெக்சன் கொடுத்து சுதந்திரமாக செயல்பட்டு வந்த நிலையில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை மாறன் உருவாக்கி அனைத்து ஏரியாக்களின் கேபிள் கனெக்சனும் சுமங்கலி கேபிள் விஷன் வழியாகத்தான் நடைபெற வேண்டும் என்று மிரட்டி சாதித்தனர், இதனால் கேபிள் உரிமையாளர்கள் எல்லாம் மாறன் கம்பெனியின் கலெக்சன் ஏஜென்டாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது போன்றே ஆம்னி பஸ் தொழிலில் இறங்கும் ஒரு திட்டத்துடன் திமுக தலைமையின் இன்னொரு பெரிய குடும்பம் செயல்பட திட்டமிட்டது, 2011 தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன் அந்த பெரிய குடும்பத்தின் ஓகே ஓகே போடும் தளபதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் ஆம்னி பஸ்களையும் தங்கள் ஆம்னி நிறுவனம் ஆரம்பித்து அதன் கீழ் இணைக்க திட்டமிட்டிருந்தார், இதன் மூலம் தற்போது ஆம்னி பஸ் வைத்திருக்கும் ஓனர்கள் இந்த குடும்பத்தின் கலெக்சன் ஏஜெண்ட்டுகளாக மட்டுமே மாறும் நிலை வந்திருக்கும், இதனால் ஆம்னி பஸ் ஓனர்கள் கடந்த தேர்தலின் போது அதிமுகவுக்கு தாராளமாக நிதியுதவி அளித்தார்கள்.

இப்படி திரை உலகமும், ஆம்னி பஸ் உரிமையாளார்களும் தங்களுடைய தொழிலை காப்பாற்றியதற்கு  செஞ்சோற்று கடன் தீர்க்கவே இந்த போராட்டங்களை நடத்துகிறார்கள்

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies