சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் விருத்தாசலம் வழியாக சென்னை
எழும்பூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது இரவு 9 மணிக்கு
புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூருக்கு சென்றடைகிறது.
இதேபோல் மறு மார்க்கத்தில் மற்றொரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் பகல் நேரங்களில் ஜங்ஷன் 1–ஏ பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்படும். அப்போது ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் எலிகள் அடிக்கடி ரெயில் பெட்டிகளுக்குள் புகுந்து விடும். இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
இதுபற்றி பயணிகள் பலமுறை ரெயில்வே துறையில் புகார் செய்து வருகிறார்கள். ஆனாலும் எலி தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று இரவு சேலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (40) என்பவர் சென்னை செல்ல எழும்பூர் எக்ஸ்பிரசில் பயணம் செய்தார்.
ரெயில் ஆத்தூர் அருகே சென்று கொண்டு இருந்த போது அவரது கையை ஏதோ கடிப்பது போல் உணர்ந்தார். இதையடுத்து அலறியடித்து கொண்டு அவர் எழுந்து பார்த்த போது எலி கடித்துகொண்டு இருந்தது. இதை அவர் காலால் உதைத்து கொல்ல முயன்றார். அப்போது காலையும் எலி கடித்தது. பின்னர் அவர் அந்த எலியை அடித்து கொன்றார். கை மற்றும் காலில் காயம் அடைந்த வெங்கடாசலம் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தார்.
அவர் விருத்தாசலம் சென்றதும் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.
ஆனால் விருத்தாசலத்தில் சிகிச்சை அளிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று காலை ரெயில் எழும்பூருக்கு சென்றதும் வெங்கடாசலம் ரத்த காயத்துடன் செத்த எலியை எடுத்து கொண்டு இறங்கினார். பின்னர் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி சேலம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து ரெயில் நிலைய சுகாதார துறை ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
எலி தொல்லையால் ரெயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.