ஆந்திர பிரதேசம் இரண்டாகப் பிரிந்த பின்னர் , பல சலுகைகளை பெற்று வந்தாலும் , மாநிலம் பிரிக்கப்பட்டது அதற்கு பெரிய இழப்பாகவே இருந்தது . இரு மாநிலங்களும் வளர்ச்சி பெற பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் ஆந்திர முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு 10,000 டேப்ளட் வழங்க இருப்பதை அறிவித்துள்ளார் .
ஆந்திர முதல்வர் , சந்திரபாபு நாயுடு கூறுகையில் , தொழில் நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்தி நமது மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் . எனவே ஒரு முன்னெடுப்பாக அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் டேப்ளட் பிசி வழங்கப்படும் என்றார் .