பிரிட்டனில் வாழும் சீக்கிய பெண் ஹர்னம் கவுர். இவருக்கு 23 வயது ஆகிறது. ஒவரி சின்ட்ரோம் காரணமாக இவருக்கு 16 வயதில் இருந்து தாடி வளர்கிறது. ஒரு டீன் ஏஜ் பெண் என்பதால் அவருக்கு அதனை மறைக்க தான் தோன்றும் , அதனால் முதலில் எடுத்து வந்தார். ஆனால் அது வளர்ந்து கொண்டே வந்தது. அடிக்கடி ஷேவ் செய்வது அவ்ருக்கு வலியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் அது பற்றி கவலை படுவதில்லை. வெளியே செல்லும் போது அனைவரும் இவரை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஆனால் அதை பற்றி இவர் கவலை பட்டத்தில்லை.
அவர் ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இத்தனை ஆண்டுகள் மனதைரியத்துடன் வாழ்ந்ததற்கு அவருக்கு பரிசு கிடைத்துள்ளது. உலகில் சிறந்த தாடி வைத்துள்ளவர்களின் போட்டோவில் இவரது போட்டோவும் இடம்பெறுகிறது. இதில் 60 பேரின் போட்டோக்கள் இடம் பெற்று உள்ளன. அவை இந்த ஆண்டு லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.