தமிழின் முன்னணி இணைய தளமான மாலைமலர் இணையதளம் வார வாரம் டாப் 10 என்ற தலைப்பில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், படங்கள் ஆகியவற்றின் முதல் பத்து இடத்தை பிடித்தவர்கள் பட்டியலை வெளியிடுகின்றது. இவர்கள் நடத்தும் கருத்துக்கணிப்பு வார கருத்துக்கணிப்பு என்பது கவனத்தில் கொள்ளதக்கது. கடந்த வாரம் இதில் டாப் 10 ஹீரோக்கள் பட்டியல் வந்தது. இதில் முதல் இடத்தில் சிவகார்த்திகேயனும், 2 வது இடத்தில் விஜய்யும், 3 வது இடத்தில் விஜய் சேதுபதியும் உள்ளார்கள். 6 வது இடத்தில் அஜித்தும், தனுஷுக்கு இந்த பட்டியலில் இடமே இல்லை.
இதில் வார வாரம் மாற்றம் இருக்கலாம், அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் எப்படி சிவகார்த்திகேயன் எப்படி முதல் இடத்தில் உள்ளார். இதில் முதல் இடத்தில் வரவேண்டியவர் தனுஷ் தான். வேலை இல்லா பட்டதாரி என்னும் வெற்றி படத்தை தந்து பல இளைஞர்களை கவர்ந்து உள்ளார். ஆனால் அவரது பெயர் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெறவே இல்லை. இது போல தவறான பட்டியலை வெளியிட்டு பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு , இது போன்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபடாமல் இருக்கலாம்.
அஜித்தின் வீரமும், விஜய்யின் ஜில்லாவும் ஒரே நேரத்தில் தான் வெளிவந்தது. இதில் ஜில்லாவை விட வீரம் நல்ல வெற்றியை பெற்றது. அப்படி இருக்கையில் அஜித்துக்கும் விஜய்க்கும் ஏன் இந்த இடைவேளீ உள்ளது. மொத்தத்தில் அஜித் , விஜய் இருவரு பெயருமே இதில் இடம்பெற்று இருக்க கூடாது. அந்த வாரத்தில் வெற்றி பெற்ற படங்களின் ஹீரோக்கள் தான் இதில் இடம்பெற வேண்டும். இது வெறும் பப்ளிசிட்டிக்காக வெளியிடப்பட்ட பட்டியல். இது இன்னும் பெரிதாகவில்லை. பெரிதானால் மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே பிரச்சனையை உண்டாக்கும் .அதன் மூலம் தங்களுக்கு செய்திகள் கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.
இது போன்ற பட்டியலை வெளியிடுவதையும், கருத்துக்கணிப்பு நடத்துவதையும் அரசு தடை செய்ய வேண்டும்.
survey about who is top tamil movie hero where vijay and ajith got low rank than sivakarthikeyan