லின்டா பேனன் என்பவருக்கு ஒரு வித ஜீன் பிரச்சனை காரணமாக இரண்டு கைகளும் இல்லை. 2003 ஆம் ஆண்டு இவர் ரிச்சார்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அந்த ஆண்டே பிரசவம் ஆனார். ஆனால் லின்டாவுக்கு இருக்கும் பிரச்சனை பிறக்கும் குழந்தைக்கும் வரும் என்பதால் குழந்தையை கலைக்க டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அவர்களுக்கு என ஒரு குடும்பம் வேண்டும் என எண்ணிய அந்த தம்பதியினர் அதற்கு மறுத்து விட்டனர்.
அதன் பிறகு அவர்களுக்கு அதே பிரச்சனையுடன் குழந்தை பிறந்தது. பிறந்த போது இதய பிரச்சனை இருந்ததால் 2 மாதங்கள் மருத்துவமனையிலே இருந்தான் அந்த சிறுவன். அதன் பிறகு நலமுடன் இருந்தான். அந்த சிறுவனுக்கு டிம்மி என பெயர் சூட்டினார்கள். அவன் சாதாரண குழந்தைகளை போல் வளர்ந்தான். அவன் பள்ளிக்கு சென்றான், அவனிடத்தில் எந்த தாழ்வு மனப்பானமையும் இல்லை. பள்ளிக்கு செல்லாத நேரங்களில் அவன் தாயுடன் கால்பந்து விளையாடுவான் அல்லது நீச்சல் அடிப்பான். அவர்கள் இருவராலும் தங்கள் கால்களை பயன்படுத்தி எழுத, படிக்க, சமைக்க , சாப்பிட முடிகிறது.
நாம் நம் வாழ்வில் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறி கொள்கிறோம் . ஆனால் இவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாமும் கற்றுக்கொள்வோம்.