துரைப்பாக்கத்தில் தனியார் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் உள்ளது.
இங்கு ரூ.1 லட்சம் முதல் 1½ லட்சம் வரை முன்பணமாக கட்டி ரூ.22 ஆயிரம்
சம்பளத்தில் பலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு நிர்வாகத்தினர் கூறியபடி சம்பளம் கொடுக்காமல் ரூ.4 ஆயிரம் மட்டும் கொடுத்ததாக தெரிகிறது. மேலும், அவர்களை வேறு இடத்தில் உள்ள நிறுவனத்தில் பணிமாற்றம் செய்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஊழியர்கள் கீழ்க் கட்டளையை சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம் பெண் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் பல லட்சம் பணம் வசூல் செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல் வேப்பம் பட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் மீது ஊழியர்கள் திருமுல்லை வாயலை சேர்ந்த சசிக்குமார் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
ஆன்–லைனில் வேலை தருவதாக கூறியதால் ரூ.3500 கட்டியதாகவும், ஆனால், நிர்வாகத்தினர் கூறியபடி மாதச் சம்பளம் ரூ.6 ஆயிரம் கொடுக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்து உள்ளனர்.