ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய எபோலா
விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவியதில்
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தொடர்ந்து
அதிகரித்துவரும் இதன் தாக்கத்தினால் உலகெங்கும் சுகாதார பாதுகாப்பு
நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உலக சுகாதாரக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல நாடுகளும் இத்தகைய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள
வங்காளதேசமும் மூன்று மாதத்திற்கு எபோலா எச்சரிக்கை அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
அங்குள்ள டாக்கா, சிட்டகாங், சில்ஹெட் ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும், சிட்டகாங் துறைமுகத்திலும் அடுத்த 90 நாட்களுக்கு மருத்துவ அணிகள் கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ளும் என்று சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராணுவத்தினரின் மேற்பார்வையில் 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ வார்டு ஒன்று தலைநகருக்கு வெளியே அமைக்கப்பட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அங்கே தொடர்பு கொள்ளுமாறு இந்த மருத்துவக் குழு அறிவுறுத்தும்.
எனினும், முன்னரே எபோலா நோயாளிகளைத் தடை செய்து வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளும், நோயால் பாதிக்கப்பட்ட வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடை செய்யப்பட்ட விமானப் பயணங்களும் இந்த கொடிய வைரஸ் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவும் சாத்தியத்தைக் குறைத்துள்ளது என்று அரசு நடத்தும் தொற்றுநோய் நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் மஹ்முதூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதாரக் கழகத்தின் அறிவுரையின்படி நோய் பாதித்த ஆப்பிரிக்க நாடுகள் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளை சோதனையிடத் துவங்கியுள்ளபோதிலும் வங்காளதேசம் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.