உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்வது வாடிக்கை. ஆனால்
மருத்துவர் எழுதும் மருந்துச்சீட்டோ வேடிக்கையாக இருக்கும். முற்றிலும்
புரியாத வகையில் மருத்துவர்கள் தங்கள் மருந்து பரிந்துரைகளை எழுதித்
தருகின்றனர்.
இதனால் பல நேரங்களில் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பலமுறை கோரிக்கை எழுந்தபோதும், தற்போது பாராளுமன்றத்தில் இக்கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மீரட் தொகுதியிலிருந்தது இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.பி.யான ராஜிந்தர் அகர்வால் மக்களவையில் இக்கோரிக்கையை எழுப்பினார்.
மருத்துவர்களின் மோசமான எழுத்துக்களால், மருந்துக் கடை ஊழியர்கள் சரியான அர்த்தத்தை புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு புரிந்த வரையில் ஏதோ ஒரு மருந்தை அவர்கள் தருகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகிறார்கள் என்று மக்களவையில் அகர்வால் புகார் கூறியுள்ளார்.
சபாநாயகரின் சிறப்பு அனுமதியின்படி விதி 377ன் கீழ் இக்கோரிக்கையை அகர்வால் எழுப்பினார். இக்கருத்து உலகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.