BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

ரஜினியை சந்தித்தது எனது வாழ்நாள் சாதனை: காமெடி நடிகர் கருணாகரன் பேட்டி

பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் மூலம் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் கருணாகரன் கோவை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘கலகலப்பு’ தான் எனது முதல் படம். சுந்தர் சி. சார்தான் அறிமுகப்படுத்தினார். பிறந்தது சென்னை என்றாலும் படித்தது டெல்லியில். பள்ளி பருவம் முதல் நாடகத்தில் நடிக்க மிகவும் விருப்பம். வீட்டில் ஆரம்பத்தில் நடிக்க அனுமதியில்லை. என்னுடைய தோழி மூலம் மற்றொரு கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.

ஜிகர்தண்டா படத்தில் நடிக்க முக்கிய காரணம் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்தான். உடன் நடித்த சிம்ஹாவின் நட்பு, கதாநாயகன் என்று பாராமல் சித்தார்த் நண்பர் மாதிரி பழகியது, படத்தில் நடித்த அனைவரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.

எனக்கு காமெடி நடிகர்கள் சந்தானம், பாஸ்கர், தம்பிராமையா ஆகியோர் பிடிக்கும். அதேபோல பிடித்த குணச்சித்திர நடிகர் நாசர் சார். என்றுமே அவர் எனக்கு பிடித்த நடிகர். ரஜினிசாரின் லிங்கா குழுவில் இருந்து போன் வந்தது. நீங்க லிங்கா படத்தில் நடிக்கிறீங்க என்றனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் சூட்டிங்கில் தலைவரை நேரில் பார்த்து நான் வியந்துபோனேன். எளிமைக்கு இலக்கணம் ரஜினி சார்தான். தலைவரை சந்தித்தது என் வாழ்நாளின் சாதனை. ரஜினி சார் என்னிடம் அன்பாக பழகினார். பீட்சா படம் பற்றி பேசினார். தொடர்ந்து அனைவருக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். இப்போது இருக்கும் பெயரை காப்பாற்ற வேண்டும்.

தற்போது ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை, நண்பேண்டா, கப்பல், மகாபலிபுரம், லிங்கா போன்ற படங்களில் நடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஜிகர்தண்டா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிம்ஹா செந்தில்குமரன், ஷாஜகான், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies