கணித துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கா கொடுக்கப்படும் விருதுகளில் ஒன்று பீல்ட்ஸ் மெடல் . இதனை கணிதத்தின் நோபல் பரிசு என்றும் அழைப்பர் .
4 வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் , இந்த விருதை இந்திய வம்சவாளியான மஞ்சுல் பார்கவா இம்முறை வென்றுள்ளார் . இவர் பிரின்ஸ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் .
இந்தமுறை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார் . ஈரான் நாட்டின் மரியாம் மிசக்கானி என்பவர் இந்த விருதை வென்றுள்ளார் .