‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் திரிஷா குத்தாட்டம் ஆடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல் ‘குசேலன்’ படத்திலும் ஒரு பாடலுக்கு நயன்தாரா ஆடினார்.
அது போல் ‘லிங்கா’ படத்திலும் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைக்க முயற்சி நடப்பதாகவும், இதற்காக திரிஷாவை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுளள்து.
‘லிங்கா’ படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே எடுத்த மன்மதன் அம்பு படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். எனவே அவரை ‘லிங்கா’வில் குத்தாட்டம் ஆட வைக்க கே.எஸ்.ரவிக்குமார் விரும்புவதாகவும் கூறப்பட்டது.
திரிஷாவிடம் இது குறித்து கேட்ட போது ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும்படி இதுவரை யாரும் என்னிடம் கேட்க வில்லை என்றார்.
ரஜினி படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. எனவே திரிஷா இப்படத்தில் ஆட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
‘லிங்கா’வில் சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.