பீகாரில் உண்ணாவிரதம் இருந்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின்
எம்.எல்.ஏ. ஒருவர் சுதந்திர தினத்தன்று தீக்குளித்து சாகப்போவதாக மிரட்டல்
விடுத்துள்ளார்.
போஜ்பூர் மாவட்டம் ஜெகதிஷ்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தினேஷ் குமார் சிங், பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்வரின் அலுவலகத்திற்கு வெளியே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த அவரை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கிருந்தபடி உண்ணாவிரதத்தை தொடரும் அவர் தனது கோரிக்கையை ஏற்று பீகாரை வறட்சி மாநிலமாக நாளைக்குள் அறிவிக்காவிட்டால் சுதந்திர தினத்தன்று தீக்குளித்து தற்கொலை செய்துவிடுவதாக எச்சரித்துள்ளார்.
“மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் இந்த பருவத்தில் நெல் நடவு செய்யவில்லை. ஆனால், அவர்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை.
பீகார் மாநிலத்தின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. ஆனால் அரசோ விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்தைப் பற்றி கவலைப்படவில்லை. விவசாயிகள் அழுதுகொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் பசியால் வாடுகின்றன. அவர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்று எம்.எல்.ஏ. தினேஷ் குமார் சிங் குற்றம் சாட்டுகிறார்.
அவரது இந்த திடீர் மிரட்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.