பிரதமர் நரேந்திர மோடி லே மற்றும் லடாக் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள
நமது ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் முன்பாக உரையாற்றினார்.
அப்போது ''நமக்கு அருகில் இருக்கும் நாடு நம்மிடம் மரபு சார்ந்த போர் புரியும் பலத்தை இழந்துவிட்டது. எனினும், நமது நாட்டில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது.
போரில் ஏற்படும் சேதத்தை விட தீவிரவாதத்தால் நமது ராணுவத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தீவிரவாதம், இன்று உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. எனவே மனித நல பற்றுக்கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராட முன்வர வேண்டும்.
இதற்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கவேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாக இருக்கிறது’’ என்றார்.
இந்நிலைியல் மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘‘பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது’’ என்ற மோடியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.