BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

கார் மீது பஸ் பயங்கர மோதல்: நடிகர் பிரகாஷ்ராஜ் உயிர் தப்பினார்

நடிகர் பிரகாஷ்ராஜ் பயங்கர விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஐதராபாத்தில் இந்த விபத்து நடந்தது. அங்குள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி சென்றார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தார்கள்.

மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் பிரகாஷ்ராஜ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

இதுபோல் பக்கத்தில் நின்ற இன்னொரு ஆட்டோவையும் அந்த பஸ் இடித்து தள்ளியது. ஆட்டோ இன்னொரு காரில் மோதி அதுவும் சேதமானது. இந்த விபத்தில் பிரகாஷ் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் இருந்த குடும்பத்தினரை உடனடியாக கீழே இறக்கி ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த விபத்து பற்றிய தகவலை பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பயங்கரமான விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து தப்பியது அதிர்ஷ்டம். விபத்து நடந்தபோது கார் ஆட்டோக்களில் இருந்தும், மோட்டார் சைக்கிள்களில் இருந்தும் நிறைய பேர் கீழே விழுந்தனர். அவர்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

குறிப்பாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் விபத்தை செல்போனில் படம் எடுத்தனர். இதை பார்த்து வெட்கி தலைகுனிந்தேன். உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற பயம்தான் எனக்கு அதிகமாக இருந்தது.

இவ்வாறு கூறியுள்ளார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies