BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

வானவராயன் வல்லவராயன் படத்துக்கு யு சான்றிதழ்

கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘வானவராயன் வல்லவராயன்’. கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மேலும், சந்தானம், சௌகார் ஜானகி, கோவை சரளா, ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜமோகன் இயக்கியிருக்கிறார். சினேகன் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். பழனிகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான சென்சார் மும்பையில் நடைபெற்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட்கூட இல்லாமல் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை மகிழ்ச்சி பொங்க படக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தை டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டைன்மென்ட் பிரைவேல் லிமிடெட் வழங்க, மகாலட்சுமி மூவிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies