உலகமே இப்போது செல்பி போட்டோவுக்கு அடிமையாகி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே செல்பியாக தான் இருக்கிறது. இந்த மாதம் செப்டம்பர் மாதம் எல்லாரும் ஐ போன் 6 ஐ தான் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு போட்டியாக ஒன்று வந்துள்ளது. செல்பி எடுப்பதற்காக ஸ்பெஷலாக ஒரு மொபைல் போன் செப்டம்பர் மாதம் வரவுள்ளது.
அது தான் நோக்கியா லுமியா 730 . இதன் முன் கேமரா 5 மெகா பிக்சல் ஆகும். இதன் லென்சுகள் செல்பி எடுப்பதற்கு என பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இப்போது இதனை செல்பி போன் என்று தான் அழைத்து வருகிறார்கள்.