‘சாட்டை’ படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சுவாசிகா. இவர்
‘கோரிப்பாளையம்’, ‘மைதானம்’, ‘ரணம்’ ஆகிய படங்களிலும் கதாநாயகியாக
நடித்துள்ளார். இவர் தற்போது ‘பண்டுவம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகனாக ‘அப்பாவி’, ‘இவனும் ஒரு பணக்காரன்’ ஆகிய படங்களில் நடித்துவரும் சிதேஷ் நடிக்கிறார். மேலும், எஸ்.சிவகுமார், சுயம்பிரகாஷ், அனிமல் ஆண்டனி, அமிதாடேஸ், லாலிதயா, திவ்யா, ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் மூலக்கதையை படத்தின் தயாரிப்பாளரான பி.குணசேகரன் எழுதியிருக்கிறார். அதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.சிவகுமார். படம்குறித்து அவரிடம் கேட்கும்போது,
இது ஒரு திரில்லர் கதை ! மருத்துவ கல்லூரி ஒன்றில் நடக்கும் கதை! மருத்துவ கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவனை கோபமுள்ள முரடனாக்குகிறது. அவன் பழிவாங்க துடிக்கிறான். அவன் யாரை எதற்காக பழிவாங்க துடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் மூலம் உணரலாம்.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது என்றார்.
படத்திற்கு நிரோ இசையமைத்திருக்கிறார். முத்ரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.எஸ் டெவலப்பர் பட நிறுவனம் சார்பாக பி.குணசேகரன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு பிறகு மேலும் ஒரு படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.