எத்தனை வகை வகையான வண்டிகள் வந்தாலும் நமக்கு சைக்கிளில் செல்வது என்றால் ஒரு த்ரில்லான அனுபவம் தான் . ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை சைக்கிள் ஒட்டுவது என்பது சிறுவர்களுக்கான விஷயம் என்று ஆகி விட்டது . ஆனால் இன்னும் சைக்கிள் பிரியர்கள் இருக்க தான் செய்கிறார்கள் . அவர்களுக்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த "கிட் பைக்" . பெங்களூரு கம்பெனி ஒன்றான லுசிட் டிசைன் என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது .
இந்த சைக்கிளின் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் இதை சைக்கிளாக மாற்றிக் கொள்ளலாம் . இல்லை என்றால் அதை ஒரு பேக்கில் வைத்துக் கொண்டு செல்லலாம் .
இந்த சைக்கிளாக மாற்ற எளிமையானது . வெறும் அலுமினிய குழாய்களை ஒன்றாக இணைத்தால் போதுமானது . இந்த சைக்கிள் இப்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது .
இந்த சைக்கிள் விற்பனைக்கு வந்தவுடன் இதில் ஏறி ஒரு ரவுண்டு போக வேண்டும் .