உலகின் முன்னனி நிறுவனங்களின் ஒன்றான ஆப்பிளில் பணிபுரியும் மூன்று பொறியாளர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார் . மேலும் $ 171 பில்லியன் மதிப்புள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருள் தேவை , சேவை மற்று ஆதரவு வேலையை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் அதிக அளவில் செய்து வருகின்றனர் .
இந்த ஆய்வை எச்.எப்.எஸ் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ளது . இந்த நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் கூறுகையில் , " மூன்றில் ஒருவராக இருக்கும் இந்தியர்கள் ஒன்று எச்-1 -பி விசா வைத்து இருப்பார்கள் அல்லது கிரின் கார்டு வைத்து இருக்கிறார்கள் . மேலும் இந்த ஆய்வில் ஆப்பில் நிறுவனம் இந்தியாவின் 5 ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது " என்றார் .
ஆனால் அந்த நிறுவனங்களின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார் . விப்ரோ , இன்போசிஸ் , டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது .