BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 9 August 2014

நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்: லட்சுமிமேனன்

நடிகை லட்சுமிமேனன், தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் நடித்த ‘கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை’ உள்ளிட்ட படங்கள் ஹிட்டாயின. தற்போது சித்தார்த் ஜோடியாக நடித்த ஜிகர்தண்டா படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

கார்த்தி ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிப்பாய், ரஜினி முருகன் படங்களும் கைவசம் உள்ளன. லட்சுமிமேனன் பற்றி காதல் கிசுகிசுக்கள் எதுவும் வரவில்லை. விஷாலுடன் முத்தகாட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கதைக்கு தேவை என்றால் முத்தகாட்சியில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அவர் கூறும் போது, நான் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை. திருமணம் ஆகாமல் நிறைய பெண்கள் சாதித்து உள்ளனர். அது போல் நானும் இருப்பேன் என்று கூறினார். விஜய், அஜீத், மம்முட்டியுடன் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies