’’இந்த வருடத்துக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன். மணப்பெண் யார்?
என்று இப்போது சொல்ல மாட்டேன்’’ என்று நடிகர் சித்தார்த் கூறினார்.
பேட்டி
பாய்ஸ், ஆயுத எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்துள்ள சித்தார்த்துக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சித்தார்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம், ’’கடந்த முறை தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியை தொடர்ந்து உங்களை சந்தித்தேன். இந்த முறை ஜிகர்தண்டாவின் வெற்றிக்காக சந்திக்கிறேன். அடுத்த சந்திப்பும் இதுபோல் ஒரு சந்தோஷமான சந்திப்பாக இருக்கும்’’ என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சித்தார்த் அளித்த பதில்களும் வருமாறு:-
திருமணம்
கேள்வி:- அடுத்த சந்தோஷமான சந்திப்பு உங்கள் திருமணம் தொடர்பாக இருக்குமா?
பதில்:- அப்படி உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இந்த வருட இறுதிக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன்.
கேள்வி:- அது, காதல் திருமணமாக இருக்குமா?
பதில்:- திருமணமாக இருக்கும். காதல் திருமணமாக இருக்குமா? என்று சொல்ல முடியாது.
கேள்வி:- மணப்பெண் யார்?
பதில்:- மணப்பெண் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.
ஜோடி
கேள்வி:- உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?
பதில்:- ஜோடியை நான் முடிவு செய்வதில்லை. டைரக்டர் தான் முடிவு செய்கிறார். எனக்கு பொருத்தமானவர் என்பது டைரக்டர்களுக்குத்தான் தெரியும்.
கேள்வி:- ’’சித்தார்த்தின் ரசிகை நான்’’ என்று உங்களை லட்சுமிமேனன் புகழ்ந்து இருக்கிறாரே?
பதில்:- லட்சுமிமேனன் என் ரசிகை என்று புகழவும் செய்வார். ’பாய்ஸ்’ படம் வெளியானபோது, நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று காலை வாரவும் செய்வார்.
ரசிகர் மன்றம்
கேள்வி:- நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அவசியமா, அவசியமில்லையா?
பதில்:- எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. இஷ்டப்பட்ட நடிகர்கள் வைத்துக் கொள்கிறார்கள். எனக்கும், ரசிகர் மன்றத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
கேள்வி:- ஜிகர்தண்டா, ஒரு கொரிய படத்தின் ’காப்பி’ என்கிறார்களே?
பதில்:- அதை நீங்கள் டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி:- அந்த படத்தில், நடிகரான விஜய் சேதுபதியை நீங்கள் மிரட்டி நடிக்க வைப்பது போல் ஒரு காட்சி வருகிறதே...அதுபோல் உங்களை யாராவது மிரட்டி நடிக்க வைத்து இருக்கிறார்களா?
பதில்:- என்னை யாரும் மிரட்டவில்லை. அது, சினிமாவுக்காக வைக்கப்பட்ட காட்சி. அதை ’சீரியஸாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது.’’இவ்வாறு சித்தார்த் கூறினார்.