நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் மாஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார்
மலையாள திரைப்பட நடிகர் ஜெயராம். இந்த படத்தை வெங்கட் பிரபு
இயக்குகிறார். நான்கு இளைஞர்கள் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக
செல்லும்போது, எதிர்பாராதவிதமாக சரோஜா என்ற பணக்கார வீட்டு சிறுமி குமபல்
ஒன்றால் கடத்தப்பட்டு இருப்பதை அவர்கள் அறிகிறார்கள். இது குறித்த கதையை
கொண்டு எடுக்கப்பட்ட சரோஜா படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக
நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்திலும் நடிப்பதற்கு நடிகர் ஜெயராமுக்கு வெங்கட் பிரபு வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. உத்தம வில்லன் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வரும் ஜெயராம் மீண்டும் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வமாகியுள்ளார். சென்னை 600028 பட இயக்குநருடன் சேர்ந்து பணியாற்றுவது அதிக மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சான் படத்திற்கான விளம்பர பணிகளை நடிகர் சூர்யா முடித்த பின்பு விரைவில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்தியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பிரியாணி படத்தில் இணைந்து பணியாற்றியபின்பு பல வகைப்பட்ட நடிகர்களை சேர்த்து தனது அடுத்த படத்தை எடுக்கிறார் வெங்கட் பிரபு.