BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? கொதிக்கும் பேஸ்புக் பதிவர்

தற்போது வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்கியுள்ளார், இப்படத்தை ஃபேஸ்புக்கில் சிலர் விமர்சித்துள்ளார்கள், இதில் எரிச்சலான கார்த்திக் சுப்புராஜ்ஜின் நண்பரும் சூதுக்கவ்வும் திரைப்படத்தின் இயக்குனருமான நலன் குமாரசாமி ஜிகர்தண்டாவை விமர்சித்தவர்களை நக்கலடிக்க அதை ஃபேஸ்புக்கில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்

நலன் குமாரசாமியின் பதிவிற்கு குழலி என்ற ஃபேஸ்புக் பதிவர் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார், அந்த பதிவு உங்கள் பார்வைக்கு

"சூதுகவ்வும்" என்ற சுமார் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய சோசியல் மீடியா நண்பர்களை கேவலப்படுத்திய இயக்குனர் நலன்

முன்னாள் குறும்பட இயக்குனரும், இது வரை ஒரு படத்தை இயக்கியவருமான நலன் அவரின் நண்பர் கார்த்திக் சுப்பராஜின் திரைப்படத்தை விமர்சித்தவர்களை இவர் விமர்சித்து ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார், அந்த பதிவின் அடிப்படை சாரம்சம் ஒரு படத்தை இயக்கி பார்க்க துப்பில்லாதவர்கள் எல்லாம் விமர்சனம் எழுத என்ன தகுதியிருக்கு மூடிக்கிட்டு போடா என்பது தான், அதற்கும் மேலாக ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று நண்பர்கள் என்ற அல்லக்கைகளுடன் சேர்ந்து நக்கல் வேறு. இதில் என்ன கொடுமை என்றால் நலன் இயக்கிய சூதுகவ்வுமை விளம்பரப்படுத்தியதற்கு ஃபேஸ்புக் தான் முக்கிய காரணமே.

நலன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? நாம சூது கவ்வும் படத்திலிருந்து ஆரம்பிப்போம், சூதுகவ்வும் படம் வணிகரீதியாக ஓடியிருக்கிறது, ஆனால் ஒரு இயக்குனரின் படமாக சூதுகவ்வும் ஒரு சுமார் மொக்கை படம். சூதுகவ்வும் படத்தின் பெரும் வெற்றிக்கு சிலரின் திறமைகளும் பலரின் சென்டிமெண்ட்டும் உள்ளது. 

பொதுமக்களுக்கு இவன் நம்ம ஆளுடா என்று பிடித்துப்போன விஜய் சேதுபதி அண்ட் கோவின் அட்டகாசமான நடிப்பு, டட்டடட்ட டா டட்ட்டடா டட்ட்டடா என்று பிஜிஎம் மோடு அதிரடியான கலக்கலான ப்ரெஷ்ஷான சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான இசை, கானா பாலா, ஜிகேபி யின் சூப்பர் டூப்பர் பாடல்கள் என பல திறமைசாலிகள் சுமாராக இயக்கப்பட்ட சூதுகவ்வும் படத்தை தாங்கிபிடித்தனர்.

அட்டைகத்தி படத்தில் அத்தனை பேரையும் இயக்குனர் தாங்கிபிடித்தார், ஆனால் சூதுகவ்வுமில் அத்தனை பேரும் இயக்குனரை தாங்கிபிடித்தார்கள், இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை சூதுகவ்வும்மின் சூரமொக்கை இயக்கத்தை பலரும் விமர்சித்திருந்தால் இயக்குனர் நலனுக்கு இன்று கொம்பு முளைத்திருக்காது. ஆனால் விமர்சகர்கள் இவைகளை எல்லாம் சாய்ஸில் விட்டதன் பின் பெரும் உளவியல் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் சுமார் மொக்கை சூதுகவ்வுமை ப்ளாக் ஹ்யூமர், தமிழ் இண்டஸ்ட்ரியின் போக்கை மாற்றும் படம் என்று ஒன்றிரண்டு பேர் சொல்ல நலனின் கொம்பு மேலும் வளர்ந்துவிட்டது போலும்.

ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று ஒரு நண்பர் அதில் கமெண்ட் போட்டுள்ளார், ஆக்சுவலா சூதுகவ்வும் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் என்பது அதன் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் அதை யூடியூபில் இலட்சம் பேர் பார்த்தனர் என்பது தான், அது எப்படி ஒரு இலட்சம் வியூ ஒரே நாளில் வந்தது என்று பிறர் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம், ஆனால் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் பல ஆண்டுகளாக பழம் தின்று கொட்டை போட்ட எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு என்ன மாதிரியான மார்க்கெட்டிங் உத்தி பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ள முடியாதா என்ன? (அது என்ன உத்தி என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இன்பாக்ஸுக்கு வரவும், இண்டஸ்ட்ரி ஆட்களுக்கு கன்சல்டிங் சார்ஜ் உண்டு)

கந்தசாமி என்ற ஒரு படம் வெளிவந்தது படம் முதல் ஷோ ஓடும் போதே முதல் டிவிட் விழுந்தது "கந்தசாமி ஒரு நொந்தசாமி" என்று அதையடுத்து நான்கு நாட்கள் கந்தசாமி யை கிழித்த்து நொந்த சாமி ஆக்கினார்கள், டிவியில் அந்த படத்தை பின்னொரு நாள் பார்த்த போது அடடா படம் நல்லா லாஜிக்காக, சூப்பர் ஹிட் பாடல்களுடன், விக்ரமின் நடிப்பு, ஷ்ரேயாவின் கிரேஸ் உடன் படம் ஓகேவா தானே இருக்கு ஏன் கிழித்தெடுத்தார்கள் என்று பார்த்தால் அது இயக்குனரின் வாய்க்கொழுப்பினால் தான் என்பது புரிந்தது, படம் வெளியாகும் முன் நலன் கூறிய அதே வார்த்தைகளை தான் கொட்டியிருந்தார் இயக்குனர். "படம் எடுப்பது எவ்ளோ கஷ்டம் என்று தெரியாமல் ஈஸியாக‌ சோஷியல் மீடியாவில் விமர்சிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். படம் வெளியான உடன் ஸ்ட்ரிக்ட் வேல்யூவேஷன் செய்யும் வாத்தியார்களை போல படத்தின் அத்தனை மைனஸ்களையும் கிழித்து எடுத்து விமர்சித்தார்கள், விளைவு ஊத்தல்.

சூதுகவ்வுமில் இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை இயக்குனரின் சூர மொக்கையை விமர்சிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்த போதும் இதை யாரும் விமர்சிக்கவில்லை, ஏனெனில் விமர்சகர்கள் என்னும் வாத்தியார்கள் அட நம்ம பசங்கய்யா என்று ஸ்ட்ரிக்ட் வேல்யூஷன் செய்யாமல் லிபரல் வேல்யூவேஷன் செய்தனர்.

நலன் எடுத்து காட்டியதை போல சினிமாவில் இம்மி அளவிலும் பயிற்சி பெறாது, தமது குடும்பக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருக்கும் அத்தனை பேருக்கும் சினிமா என்ற உலகத்தில் நுழைய ஆசை உண்டு, தமிழ் சினிமா உலகில் பெரும் பணக்காரர்கள், பழம்பெருச்சாளிகள், வாரிசுகள் தான் வாழ முடியும் என்ற நிலையை கண்டு சாதாரணர் ஒவ்வொருவருக்கும் ஒரு கடுப்பு உண்டு, அப்போது தங்களை போன்ற ஒருவன் சினிமாவில் வெற்றியடையும் போது அவனை நம்ம ஆளுடா என்று போற்றி தூக்கி கொண்டாடுவார்கள், அப்படி தான் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இன்று கொண்டாடப்படுகிறார்கள். சினிமாவில் நேசிப்பவராக திறமையானவர்களை அடையாளம் காட்டும் தயாரிப்பாளராக சிவிகுமார் இருப்பதால் தான் அவரின் வெற்றிகளை இந்த சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள், நலன் கார்த்தி சுப்பாராஜ் போன்றவர்கள் ஃபேஸ்புக்கோடும் யுடியூபோடும் குறும்படங்கள் மூலமாக வளர்ந்தவர்கள், இவர்களின் வெற்றியை தன் வெற்றி போல கருதிய இந்த விமர்சகர்கள் இவர்களின் வெற்றிக்கு இடையூறு ஏற்படாதவாறு விமர்சனங்களை வைத்தார்கள். வில்லா-2 வின் விமர்சனத்தில் இதை நீங்கள் நன்றாக பார்க்கலாம். 

சூதுகவ்வுமில் இந்த உளவியல் தான் எல்லோரும் படம் நல்லா இருக்கு என்று ஸ்டேட்டஸ் போட காரணம், ஸ்பான்சர் வியூ மார்க்கெட்டிங்கை விட பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் ஒரு பிராடெக்டின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும், சூதுகவ்வும் டீம் செய்த மார்க்கெட்டிங்கை விட அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய சினிமா ரசிகர்கள் கொடுத்த பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் அதிகம். சூதுகவ்வும் படம் நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டதில் பாதி பேர் வத்திக்குச்சி, தடையற தாக்க போன்ற அட்டகாசமாக இயக்கப்பட்ட நல்ல படங்களுக்கு நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தால் இந்த படங்கள் பெரும் வெற்றிகளை பெற்றிருக்கும், யுடியூபில் போய் பாருங்கள் தடையறதாக்கவும், வத்திக்குச்சியும் எத்தனை லட்சம் பேர் பார்த்திருக்கிறாகள் என்று தெரியும்.

ஒரு வயசில் ஒரு குழந்தை தத்தக்கா பித்தக்கா என்று நடந்து கீழே விழுந்து எழுந்தாலும் அதை கைதட்டி வரவேற்று பாராட்டுவார்கள், ஆனால் 10 வயசிலும் அதே குழந்தை கீழே விழுந்து எழுந்து நடந்தால் அதை கைதட்டி யாரும் பாராட்ட மாட்டார்கள், 10 வயதில் நடக்க தெரியாது விழுந்து எழுந்தால் திட்டத்தான் செய்வார்கள்.

சூதுகவ்வும் படத்தை அதன் தகுதிக்கு அதிகமாக பாராட்டியதன் விளைவு அதை தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் என்று எல்லாம் சிலர் எழுதியதன் விளைவு இன்று அதன் இயக்குனர் நலனுக்கு விமர்சனங்களே செய்யக்கூடாது என்ற மனநிலைக்கு கொண்டு போய் உள்ளது. எப்ப சார் இந்த மாதிரி யோசிக்க தோணுது, விஜய் டிவி விருதுகள் அரங்கில் கேலரி சீட்டிலிருந்து ரவுண்ட் டேபிளில் போய் உட்காரும் போதா?

பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்கியராஜ், பார்த்திபன் உட்பட தமிழ்சினிமாவின் வெற்றி படங்கள் தந்த அத்தனை இயக்குனர்களும் அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்ட் செட்டர்கள் தான், பாராதிராஜாவும் பாலச்சந்தரும் கடைசி காலங்களில் ஹிட் அடிக்க முட்டியடிக்கின்றனர், ஆனால் முடியவில்லை, இன்னும் சினிமா உலகில் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, அதற்கு சகிப்புத்தன்மை முக்கியம்.

அவனவன் துணை இயக்குனராக 10 வருசம் 15 வருசம் குருகுல கல்வி மாதிரி திரையுலகில் அடிபட்டு மிதிபட்டு அசிங்கப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு ஒரு புரொட்யூசர் பிடித்து படம் இயக்கி இயக்குனராக வந்து தன் ஒருவனின் திறமையை மட்டுமே நம்பி அமெச்சூர் டீமை வைத்து படம் எடுத்து ரிலீஸ் செய்து அதன் பிறகு அது வெற்றிபெற்று கிடைக்கும் வாய்ப்பும் புகழும் பெயரும் பணமும், குறும்படங்கள் என்றும் முதல்படத்திலேயே பெரும் திறைமைசாலிகளுடன் இணையும் வாய்ப்பு கிடைத்து ஈஸீயாக வெற்றியை சுவைத்தால் இப்படித்தான் கொம்புமுளைக்கும்

https://www.facebook.com/kuzhalipuru


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies