தமிழக போலீஸார் 8 மணி நேரம் தான் பணி என்னும் கோரிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வைக்கப்பட்டது. அது குறித்து தேமுதிக உறுப்பினர் இன்று சட்டசபையில் கேள்வி அனுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக கூறினார். ஏனென்றால் காவல் பணி என்பது நேரம் வரையறுத்து பண்ணும் பணி அல்ல.
ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப் படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல் துறையினரின் குறைகளை அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம், ஆனால் அவர்களின் பணி நேரத்தை நிர்ணயம் செய்வது என்பது இயலாது ஒன்று.