தமிழில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்தார் தனுஷ்.
இனி தனுஷ் மார்க்கெட் அவ்ளோதான் என்று கோலிவுட்டில் எல்லோரும் கேலி பேசும் நிலை வந்தது. நம்பிக்கை தளராத அவர் தனது 25-வது படமாக ‘வேலையில்லா பட்டதாரி’யை 15 கோடி பட்ஜெட்டில் எடுத்தார்.
படத்தை வாங்க போட்டா போட்டி இருந்தாலும் சரியான விநியோகஸ்தரிடம் கொடுத்தால் தான் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்று சேரும் என்று நினைத்தவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பாளர் பி.மதனிடம் படத்தை கொடுத்தார்.
அப்புறமென்ன?
இதுவரை தனுஷ் நடித்த படங்களை விட அதிக தியேட்டர்களில் (400 தியேட்டர்கள் ) படம் ரிலீசானது. ரிலீசான வேகத்திலேயே இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த ஒருசில படங்கள் லிஸ்ட்டில் வேலையில்லா பட்டதாரியும் சேர்ந்தது. வசூலும் 25 கோடியை நெருங்கி விட்டது.
தமிழில் தாறுமாறான வசூலைக் கேள்விப்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள் அதை அப்படியே ஹிந்தியில் ரிமேக் செய்ய இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஹிந்தியில் ரீமேக் ஆனால் யார் ஹீரோவாக நடிப்பது என்கிற குழப்பமே அங்கு வாங்குபவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் ஏற்கனவே ராஞ்சனா ஹிட் தனுஷுக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல இடத்தை கொடுத்திருப்பதால் அங்கும் அவரே ஹீரோவாக நடித்தாலும் நடிக்கலாம்.
அப்போ அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராயிட்டார்னு சொல்லுங்க…