கத்தி’ படத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளர் கருணாவை கூட்டிக்கொண்டு பழ. நெடுமாறன், திருமாவளவன், சீமான் ஆகிய தமிழக அரசியல் மற்று இயக்கத் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும், இன்னும் வைகோ மட்டும் தான் பாக்கி என்று நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்கள் சந்தித்துப் பேசிய தலைவர்கள் எல்லோரும் ‘கத்தி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களா? இல்லையா? என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
இதற்கிடையே ‘கத்தி’ படத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் மூகத்தில் கரியைப் பூசி திருப்பி அனுப்பியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கூறியிருப்பதாவது :
”இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பாளர் ஐயங்கரன் கருணாமூர்த்தியும் தலைவர் திருமாவை வந்து சந்தித்தார்கள்.
பிரச்சனைக்குரிய ‘லைகா’ நிறுவனத்தைப் பற்றி விளக்கம் அளித்தார்கள். ஆனால் அவர்களுடைய விளக்கம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவோ, அவரது கூட்டாளிகளோ, தமிழ்நாட்டில் திரைப்படத்துறை உள்ளிட்ட வேறு துறைகளில் முதலீடு செய்வதை ஆதரிக்கக் கூடாது என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
எனவே லைகா நிறுவனத்தையோ, அது தயாரிக்கும் ‘கத்தி’ படத்தையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ‘கத்தி’ படம் கடும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்து விட்டது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் தமிழக அரசியல் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், மாணவர் இயக்கங்கள், ஆளுங்கட்சி என எல்லோரும் ஒருங்கிணைந்து ‘கத்தி’ படத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது பணத்துக்காகவும், பட வாய்ப்புக்காகவும் ராஜபக்ஷேவின் கூட்டாளிகளிடம் கையேந்தும் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பாடமாக அமையும்.