சீனாவின் கிழக்கு பகுதி குன்சன் நகரில் இயங்கி வந்த உலோகப் பொருள்
தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 68 பேர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இவ் வெடிவிபத்து இன்று காலை
7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உலோக ஆலையில் பாலிஷ் போடும் பிரிவில் இன்று அதிகாலை நேரிட்ட வெடி விபத்தில் 68 பேர் பலியானதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.விபத்துக்கான காரணம் உலோகத் தூசுகள் ஆலையில் நிரம்பியதை கவனிக்காமல் விட்டதே என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.