இந்தியாவின் 68–வது சுதந்திர தினத்தையொட்டி காலை சென்னை ஜார்ஜ் கோட்டை
கொத்தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றினார்.
சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அழியாத கல்வெட்டு. வ. உ. சிதம்பரம்பிள்ளை, கட்டபொம்மனை நினைவு கூர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரத்தில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. ஏழையின் சொல்தான் புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சிறப்பு பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியிலும், தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. என்று கூறி மக்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு முதல்- அமைச்சர் உரையாற்றினார்.
தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் தியாகியின் குடும்ப ஓய்வூதியம் ரூ. 4500ல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறித்தார். பின்னர், துணிச்சலான செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்–அமைச்சரின் நல் ஆளுமைவிருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது, மகளிர் நலனுக்கான சிறந்த தொண்டாற்றிய விருது, சிறந்த உள்ளாட்சிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை உரியவர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் விருது பெற்றவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கல்பனா சாவ்லா விருதை நாகை எஸ்.பி. பொன்னிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.