5 ஆண் மகன்களைவிட அதிகமான நன்மைகளை ஒரு பெண் பிள்ளை குடும்பத்திற்கு செய்கிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
நமது நாட்டின் பாலின விகிதத்தை பார்த்திருக்கிறீர்களா? யார் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது? கடவுள் இல்லை. பெண் குழந்தைகளை கருவறையிலே மருத்துவர்கள், பெற்றோர்கள் கொல்ல வேண்டாம். என்று நான் கேட்டு கொள்கிறேன். மகன் வேண்டும் என்பதற்காக பெற்றோகள் பெண் குழந்தையை கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கருவறையிலே கொல்லாதீர்கள். அவர்கள் 21ம் நூற்றாண்டின் இந்தியாவின் இரத்தம். பெண் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும். நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன். 5 ஆண் மகன் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு என்ன நன்மை செய்து விடுவார்களோ அதைவிட அதிகமாக ஒரே ஒரு பெண் பிள்ளை செய்து காட்டியதை நேரடியாக பார்த்திருக்கிறேன். என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நமது விளையாட்டு வீரர்கள் நம் தேசத்திற்கு நிறைய பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் நிறைய பெண்களும் இருக்கின்றனர். என்று மோடி தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி பேசுகையில், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. மகள்களை போல் மகன்களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும். பெற்றோர்களாக நாம் நம் பெண் பிள்ளைகளிடம் பல கேள்விகள் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது ஆண் பிள்ளையிடம் எங்கே போகிறாய் என கேட்டிருக்கிறோமா? பெண் பிள்ளைகளுக்கு விதிக்கும் ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை ஏன் நாம் ஆண் பிள்ளைகளுக்கு விதிப்பதில்லை? குற்றங்கள் நடைபெறும் போது சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும். ஆனால் நாமும் நமது மகன்கள் நேர்வழியில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். என்று கூறினார்.