தனது முதல் சுதந்திர தின உரையை மோடி இன்று டில்லி செங்கோட்டையில் நிகழ்த்தினார் . முதல் முறையாக எந்தவொரு பாதுகாப்பு கூண்டிலும் இல்லாமல் மோடி இந்த உரையை நிகழ்த்தினார் . அதற்கே அவரை நாம் பாராட்டி ஆக வேண்டும் . மேலும் இந்த உரையில் அவர் கூறிய சில சிறப்பான செய்திகளைக் கீழ்க் காணலாம் .
1 ) நான் உங்களின் பிரதமர் இல்லை . உங்களின் பிரதம பணியாளன் . உங்களின் பிரதம பணியாளனாக இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
2 ) ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது உங்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன் . இது தான் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி .
3 ) உலகிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் - " வாருங்கள் , இந்தியாவில் செய்யுங்கள் . எங்கே வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள் , ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் . ஏனென்றால் எங்களிடம் திறனும் , திறமையும் இருக்கிறது .
4 ) வறுமைக்கு எதிராக ஒரு போர் நடத்தி நம்மால் வறுமையை வெற்றி கொள்ள முடியாதா ??
5 ) நாங்கள் எங்களின் பெரும்பான்மை அடிப்படையில் முன்னேற விரும்பவில்லை . அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னேற விரும்புகிறோம் .
6 ) ஒரு மகள் தனது பெற்றோரை ஐந்து மகன்கள் ஆற்றும் கடைமையை விட அதிகம் கடமை ஆற்றியதை நான் பார்த்துள்ளேன் .
7 ) நமது ஆண் பெண் விகிதத்தைப் பாருங்கள் ?? யார் இந்த விகிதத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது ?? கண்டிப்பாக கடவுள் இல்லை . மருத்துவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளைக் கொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
8 ) இந்த உலகம் நம்மை வெறும் பாம்பு ஆட்டிகள் என்றும் பில்லி சூனியம் செய்பவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு இருந்தது . ஆனால் நமது இளைஞர்கள் ஐ.டி துறையில் செய்த சாதனையைப் பாருங்கள் .
9 ) ஒரு துப்பாக்கியினால் இந்த உலகத்தை சிவப்பாக (இரத்தம்) மாற்றலாம் . ஆனால் ஒரு கலப்பையால் இந்த உலகை பசுமையாக மாற்றலாம் .
10 ) பெற்றோர்கள் அனைவரும் இந்நாள் வரை நமது மகள்களை தான் எங்கே செல்கிறாய் என்று கேட்டு கொண்டு இருந்தோம் . இனிமேல் நமது மகன்களையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் .