நமக்கு 10 ஆம் நம்பர் ஜெர்ஸி என்றால் ஞாபகத்தில் வருவது சச்சின் தான் . அதேப் போல கால்பந்திலும் 10 ஆம் நம்பர் ஜெர்ஸியை சில பிரபலமான வீரர்கள் அணிந்து விளையாடி உள்ளனர் , விளையாடியும் வருகின்றனர் . அந்த 10 ஆம் நம்பர் என்றாலே தனி சிறப்பு தான் .
அந்த பிரபலமான வீரர்கள் கீழ் வருமாறு .
8 ) வேய்னே ருனி ( இங்கிலாந்து )
இங்கிலாந்து கால்பந்து உலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் .
7 ) பிரான்செச்கோ டொட்டி ( இத்தாலி )
இத்தாலி ரசிகர்களிடையே பிரபலமானவர் . 2006 ஆம் ஆண்டு இத்தாலி அணிக்காக கோப்பை வென்றவர் . இவர் விளையாடும் கிளப் ரோமா இவரின் ஓய்வுக்கு பின் 10 ஆம் நம்பரை யாரிடமும் கொடுக்காமல் 10 ஆம் நம்பருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளனர் .
6 ) மைக்கெல் பிளாட்டினி ( பிரான்ஸ் )
இவரை பலருக்கு யு.இ.எப்.அ அமைப்புக்கு தலைவராக தான் தெரியும் . ஆனால் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பிடித்தவர் .
5 ) ஸினேடின் ஸிடேன் ( பிரான்ஸ் )
இவர் தன்னுடைய கடைசி போட்டியில் தலையால் முட்டி சர்ச்சையில் சிக்கினாலும் எதிரணி வீரர்களை தனது அசாத்திய திறமையால் திணறடிக்கும் திறமை வாய்ந்தவர் .
4 ) ரொனால்டினோ ( பிரேசில் )
அனைவராலும் விரும்பப்படுபவர் . ஒருவராலும் வெறுக்கப்படாதவர் .
3 ) மெஸ்ஸி ( அர்ஜெண்டினா )
இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை
2 ) மராடோனா ( அர்ஜெண்டினா )
கால்பந்து உலகின் ஜாம்பவான்
1 ) பிலே ( பிரேசில் )
இவரை கால்பந்து உலகின் அரசன் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது .