ஒரு புறம் காஸாவில் போர் , ஒரு புறம் ஈராக்கில் தாக்குதல் , ஒரு புறம் நைஜிரியாவில் போர் , உக்ரேனில் சண்டை , இவ்வாறு உலகம் முழுவதும் ஒரு சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என கேட்கும் போது , உலகமே சண்டையில் இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது . ஆனால் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தில் ஆய்வு படி 11 நாடுகள் எந்த வித போரிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறதாம் .
இந்த நிறுவனம் இந்த ஆய்வில் 162 நாடுகளை பகுப்பாய்வு செய்தனர் . இந்த ஆய்வில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகம் அமைதியை இழந்து வருவதாக தெரிவிக்கிறது . இந்த ஆய்விற்காக அவர்கள் ஒரு நாட்டின் உள்ளூர் மற்றும் வெளி பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்து ஆராய்ந்துள்ளனர் .
சான்றாக , பிரிட்டேனில் உள்நாட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லை . ஆனால் வெளிநாட்டுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் இந்த அமைதி குறியீட்டில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . அதேப் போல வட கொரியாவில் வெளி நாட்டுடன் எந்தப் பிரச்சனைகளும் இல்லை . ஆனால் உள்நாட்டுப் பிரச்சனைகளால் பின்னுக்குத் தள்ளப் பட்டது .
அந்த ஆய்வின் படி அமைதியாக உள்ள நாடுகள்
- ஐஸ்லாந்து
- டென்மார்க்
- ஆஸ்திரியா
- நியுசிலாந்து
- சுவிட்சர்லாந்து
- பின்லாந்து
- கனடா
- ஜப்பான்
- பெல்ஜியம்
- நார்வே
இந்தியாவுக்கு 142 வது இடம் .