நியுசிலாந்தின் பிரபல டேட்டிங் நிறுவனங்களில் ஒன்றான எலைட் சிங்கில்ஸ் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் , தங்களைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களை தான் கல்யாணம் செய்து கொள்வோம் என்று 70 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் தெரிவித்து உள்ளனர் .
பணம் ஒரு ஆண் பெண் இல்லற உறவில் எவ்வாறு தேவைப்படுகிறது என்று நடத்தப்பட்ட் ஆய்வில் , இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது . இந்த ஆய்வின் படி வீட்டில் இருவரும் வேலைக்குச் சென்றாலும் பெண்கள் தன்னுடைய கணவர் தன்னை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் .