அமீர் கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பிகே " படத்தின் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது . இந்த போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக இருப்பது போல் வெளியானது . இதனால் பல சர்ச்சைகளை இந்த போஸ்டர் கிளப்பியது . இதனை எதிர்த்து , நீதிமன்றத்தில் ஒரு என்.ஜி.ஓ வழக்கு பதிவு செய்தனர் . இந்த போஸ்டர் சிலரின் மத உணர்வை புண்படுத்தும் என வழக்கு பதிவு செய்தனர் .
இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறுகையில் , " உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தை பார்க்காதீர்கள் . இங்கு மதத்தை கொண்டு வராதீர்கள் . இது எல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டது . இதனை நீங்கள் எதிர்த்தால் மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் . இதை நீங்கள் மறைக்க வேண்டும் என்றால் , இணையத்தில் எல்லாம் இருக்கிறது , அவை எல்லாத்தையும் மறைப்பீர்களா ? " என்றார் .
அமீர் கானின் இந்த படம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவர இருக்கிறது .