லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அப்போது அவர் நிரூபர்களுக்கு கன்னடத்தில் அளித்த பேட்டியில் , மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் என்றார் . அந்த பேட்டி கீழ் வருமாறு :
அரசியலுக்கு வருவீர்களா ??
( எப்போதும் போல் தன்னுடைய வசீகரமான சிரிப்புடன் ) அது கடவுளுடைய விருப்பம் . கடவுள் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும்
உங்களுடைய விருப்பம் என்ன ??
கடவுளின் விருப்பம் தான் என்னுடைய விருப்பம் ஆக இருக்கும் .
அரசியலுக்கு வந்தால் முதல்வர் ஆக முடியும் என நினைக்கிறீர்களா ??
மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் .
இவ்வாறு அவர் தெரிவித்தார் .