மோடி பிரதமராக பதவியேற்ற பின் தன்னுடைய முதல் சுதந்திர தின உரையை நாளை செங்கோட்டையில் நிறைவேற்ற உள்ளார் . இந்த உரைக்கு இப்போழுதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது .
அந்த உரையின் சில சிறப்பம்சங்களைக் கீழ்க் காணலாம் :
தனது முதல் உரையை , கையில் எந்த ஒரு நோட்ஸ் எதுவும் எடுக்காமல் பேச உள்ளார் . சில முக்கிய புள்ளிகளை மட்டும் வைத்து பேச உள்ளார் . இந்த உரை 45 நிமிடங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஒரு பிரதமர் எந்த பேப்பரும் இல்லாமல் பேசுவது இது தான் முதல் முறை .
ஒரு வேளை மழை பெய்தால் , யாரும் குடை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் . மழையில் அப்படியே தன் உரையை தொடருவதாக கூறி உள்ளார் .
அவர் தனக்கு எந்த பாதுகாப்பு கவசமும் தேவை இல்லை என்று கூறிய போதும் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர் .