வாட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைதளங்களில் பிரபலமான நிகழ்ச்சி ஒன்று வரும்போது , அந்த நாளுக்கு ஏற்ற ப்ரோபைல் போட்டோ வைப்பது இப்போது ஒரு டிரண்டாக இருக்கிறது . அது போல சில நாட்களுக்கு முன் இந்திய மூவர்ணக் கொடியை ப்ரோபைல் போட்டோவாக சிலர் மாற்றினர் . ஆனால் சிறிது நேரத்திலே , அவ்வாறு வைப்பது சட்டத்தை மீறும் செயல் எனவும் , அது மூவர்ணக் கொடியை அவமதிக்கும் செயல் என்னும் செய்தி மிக வேகமாக பரவியது . இதனால் மூவர்ணக் கொடியை தன்னுடைய ப்ரோபைல் படமாக வைத்து இருந்தவர்கள் அதை நீக்கி விட்டனர் .
ஆனால் இந்திய சட்ட நிபுணர் கூறுகையில் , இந்தியர்கள் தங்கள் மூவர்ணக் கொடியை தடையில்லாமல் காட்சி செய்யலாம் என்றும் விருப்பப்பட்டால் ஆன்லைனில் கூட வெளியிடலாம் என்று கூறினார் .
சட்டப்படி நாம் நம் மூவர்ணக் கொடியை பயன்படுத்தலாம் . ஆனால் கொடியை அவமதிக்கும் விதமாகவும் , தவறாக ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அது சட்டத்தை மீறும் செயலாகும் .
இந்தியக் கொடி குறியீடு 2002 விதியின் படி , இந்தியர்களுக்கு கொடியின் கௌவரம் , கண்ணியம் ஆகியவற்றை காக்கும்படி இருந்தால் தடையற்ற காட்சிக்கு மூவர்ணக் கொடியை பயன்படுத்தலாம் .