இப்போலாம் பேஸ்புக்கில் லைக் வாங்க வேண்டும் என்று தான் பலர் சுற்றுகின்றனர் . நம் வாழ்வில் மறக்காமல் இருக்க போட்டோ எடுப்பதை விட்டு விட்டு இப்போது பல பேர் பேஸ்புக்கில் லைக் வாங்க தான் போட்டோ எடுக்கின்றனர் .
இவ்வாறு நீங்களும் பேஸ்புக்கில் அடிக்கடி போட்டோக்களை அப்லோட் செய்து லைக் வாங்க வேண்டும் என்று நினைப்பவரா , அப்படி என்றால் நீங்கள் மற்றவர்களைவிட அதிக உணர்ச்சி வசப்படுபவர்களா இருப்பீர்கள் . இதை நாங்கள் சொல்லவில்லை , ஒரு ஆய்வு கூறுகிறது .
இந்த ஆய்வில் 17 முதல் 55 வயது வரை உள்ள 100 நபர்களை தேர்ந்தெடுத்து சோதனை நடத்தினர் . இந்த ஆய்வின் படி அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களும் , மற்றவர்கள் பற்றி அதிகம் நினைப்பவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோட் செய்தாலும் , அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் தங்களுக்கு அதிக லைக் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் . மற்றவர்கள் பற்றி அதிகம் நினைப்பவர்கள் போட்டோக்களை ஆல்பமாக பதிவிட விரும்புகிறார்கள் என்று முடிவை கண்டறிந்துள்ளனர் .