இன்னும் சிறிது மாதத்தில் மாவட்டத்தில் ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது . அந்த தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்பினால் , நீங்கள் முதலில் 10,000 ரூபாய் கட்டி விட வேண்டும் . அந்த ரூபாய் திருப்பி தரப்பட மாட்டாது .
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில் , " சும்மா தேர்தலில் விளையாட்டுக்காக போட்டியிடும் வேட்பாளர்களை நீக்குவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறோம் " என்றார் .
இவர்கள் எவ்வளவு காசு கொடுத்து முன்பதிவு செய்தாலும் பெரிய தலைவர்களின் தொகுதிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே .
இதை வைத்து பாஜக தலைவர் கூறுகையில் , " காங்கிரஸ் என்றாலே ஊழல் தான் . ஆட்சியில் லட்சக் கணக்கில் சேர்த்து வைத்தவர்களிடம் இருந்து இப்போது வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் " என்றார் .