‘மங்கள்யான்’ விண்கலம் விரைவில் செவ்வாய் கிரகத்தை அடையும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
சென்னையில் பேட்டி
இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் 24–ந் தேதி அதிகாலை மங்கள்யான் அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து செவ்வாய் புவிஈர்ப்பு பகுதியில் நிலை நிறுத்தப்படும்.
மேலும் 2 ராக்கெட்
மேலும் 2 புதிய ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். பி.எஸ்.எல்.வி.–சி 26, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டும் அனுப்பப்படும். இந்த ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்படும். இதற்கான கூட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை (இன்று) தொடங்குகிறது. அடுத்த 60 நாளில் இந்த ஆய்வு முடிவடையும்.
பி.எஸ்.எல்.வி.–சி 26 விண்கலத்தில் ஐ.என்.ஆர்.எஸ்.எஸ்.–1சி நேவிகேசன் என்ற செயற்கைகோள் பொருத்தப்படும். இது கடல் வழியையும், சாலை வழிகளையும் கண்காணித்து புகைப்படங்களை அனுப்பி வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.