இந்த வகையில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பிரஷாந்த் கர்மாகர், ஜெய்தீப் சிங் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கவரை பிரித்து பார்த்தனர். ஆனால் அதில் ரூ.5 லட்சத்திற்கான எந்த காசோலையும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஜெய்தீப் சிங் கூறுகையில், ‘காமன்வெல்த்தில் வட்டு எறிதலில் நான் 4–வது இடத்தை பிடித்தேன். கவரை திறந்து பார்த்த போது அதில் எதுவும் இல்லாததை கண்டு உண்மையிலேயே நான் வேதனைக்குள்ளானேன். இந்த அரசு விளையாட்டு வீரர்களை இந்த மாதிரி நடத்தியிருக்க கூடாது’ என்றார்.
ஏதோ தவறு நடந்து விட்டதை ஒப்புக் கொண்டு அரியானா மாநில விளையாட்டுத்துறை, 10 நாட்களுக்குள் அவர்களுக்கு உரிய காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த மாநில முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா ரூ.13 கோடியே 72 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார். பதக்கம் வெல்லாத போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்பட்டன.