தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வை ராஜா வை. 3 படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் இது. இந்த படத்தை அவர் அதர்வாவுக்காக செய்தார் , ஆனால் அவரிடம் டேட் இல்லை. இதில் டாப்ஸி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதில் தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலால் ஒரு பாடல் அமைக்கப்பட்டு உள்ளது. அப்படியானால் அந்த பாட்டு எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். ஏற்கனவே தனுஷ் எழுதிய கொலைவெறி பாடல் மெகா ஹிட் ஆனது. இதில் மூவரின் கூட்டணி அமைந்து உள்ளதால் இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஒரு பாடல் மட்டும் நாளை வெளியாகிறது.