BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

மைனர் சிறுமியை கடத்திச்சென்ற வழக்கு வட்டித்தொழில் செய்பவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சோமு என்ற சோமசுந்தரராஜ் (வயது 36). இவர், அந்த பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார்.

 வட்டி பணத்தை வாங்க வீட்டுக்கு செல்லும்போது, விஜயாவின் 15 வயது மகள் அனிதாவிடம் (தாய், மகள் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசைவார்த்தை கூறி, அவளை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி 27–ந் தேதி அனிதாவை திருப்பதிக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் அடிப்படையில், அயனாவரம் போலீசார் சோமசுந்தரராஜ் மீது சிறுமி கடத்தல் மற்றும் கற்பழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசதீஷ், ‘சோமசுந்தரராஜ் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மைனர் பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies